நீட் விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில் கடிதம்

by Staff / 14-07-2024 04:24:32pm
நீட் விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி பதில் கடிதம்

நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். ராகுல் காந்தி அக்கடிதத்தில், “நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் உங்கள் கடிதம் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் இளநிலை முடிவுகள் குளறுபடிகளுக்கு பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo