28 யை கைப்பிடித்த 61

புதுச்சேரியை சேர்ந்த முதியவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான அவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது மனைவி இறந்ததில் இருந்து, தனிமையில் வாடுவதாக உறவினர்களிடம் புலம்பியுள்ளார். இதையடுத்து அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 28 வயது பெண்ணுக்கும் அவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உறவினர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் முதியவரும் இளம் பெண்ணும் மாலை மாற்றி கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே பிரான்சு குடியுரிமை பெற்றவரை திருமணம் செய்து கொண்டால், பிரான்சில் செட்டில் ஆகலாம் என்பதால் அந்த பெண் திருமணம் செய்து கொண்டதாகவும்,முதியவர் தரப்பில் பெண்ணின் குடும்பத்துக்கு சன்மானமாக பெரும்தொகை வழங்கப்பட்டதாகவும் பரப்பரப்பாக பேசப்படுகிறது.
Tags :