13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
Tags :