முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியாவின் பல்வேறு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படுகின்ற மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் அந்தந்த சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 'இன்று சில ஆளுநர்கள் காலவரையின்றி பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். அவை மாநில சட்டமன்றங்களால் முறையாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது மசோதாக்கள் தொடர்பான பகுதிகளில் அந்தந்த மாநில நிர்வாகங்களை ஸ்தம்பிக்க வைத்தது. மற்ற பல மாநிலங்களிலும் இதே போன்ற பிரச்சனைகள் உள்ளதை நாங்கள் அறிவோம்' என்று கூறியுள்ளார்.
Tags :