குடியிருப்பு பகுதிகளில் உலாவரத்தொடங்கிய ஒற்றையானையினால் மக்களை அச்சம்

by Editor / 07-09-2024 10:18:53am
குடியிருப்பு பகுதிகளில் உலாவரத்தொடங்கிய ஒற்றையானையினால் மக்களை அச்சம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்துவருகின்றன.இந்தநிலையில் கடந்த வாரம் காரிசல்குடியிருப்பு கிராமத்திலுள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த அந்தபகுதியில் புகுந்த அட்டகாசம் செய்தது.16 மணிநேர போராட்டத்திற்குபின் டானையிற் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டிய நிலையில் அந்த ஒற்றை யானை நேற்று இரவுமுதல் மக்கள் நடமாட்டமுள்ள கிராமபகுதிகளிலும் ,தேசிய நெடுஞ்சாலைப்பகுதியான புளியரை அருகில் உள்ள புதூர் மற்றும் கட்டளைக்குடியிருப்பு பேருந்து நிலையத்திற்கு மேல்புறம் உள்ள வயல்பகுதி, வாழைத்தோட்டம் மற்றும் சப்போர்ட்டா தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்துள்ளது மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வனத்துறையினர் யானையை விரட்ட நடவடிக்க எடுக்க ஊர்மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags : குடியிருப்பு பகுதிகளில் உலாவரத்தொடங்கிய ஒற்றையானையினால் மக்களை அச்சம்

Share via