SRM ஹோட்டல் விவகாரம் - அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
SRM ஹோட்டலுக்கு சீல் வைக்கும் விவகாரத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “SRM ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமைச்சர் கே.என்.நேரு மகனை எதிர்த்து எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டார். இதனால் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். திமுக இன்னும் திருந்தவில்லை என்பதே இந்த விவகாரம் மூலம் காட்டுகிறது” என்றார்.
Tags :