நீட் தேர்வு மோசடிகளை மறைக்கும் மோடி - கார்கே குற்றச்சாட்டு
நீட் தேர்வு தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நீட் ஊழலை மூலம் மறைக்க மோடி அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசியவில்லை என்றால் பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார். இது மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழலின் நவீன வடிவம் என்று கூறியுள்ளார். பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீட் வினா தாளுக்காக ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கைமாறியதை அம்பலப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :