இந்தியா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி .

by Admin / 07-02-2026 11:28:09pm
 இந்தியா அணி  29 ரன்கள் வித்தியாசத்தில்  அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி .

இன்று மும்பை வான்கடே  மைதானத்தில் நடந்த சி-20, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறிய பொழுது ஏழு விக்கெட்டை இழந்து 18வது ஓவரின் பொழுது சூரியகுமார் அதிரடி ஆட்டத்தால் 161 ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் கடைசி ரன்னில் எட்டாவது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தியால் இழந்து.. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கை அமெரிக்க அணிக்கு நிர்ணயித்தது. அடுத்து களம் கண்ட அமெரிக்க அணி 20 ஓவரில் எட்டு விக்கெட் இழப்பிற்கு132 ரன்களை எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில்  இந்திய அணி- அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 இந்தியா அணி  29 ரன்கள் வித்தியாசத்தில்  அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி .
 
Tags :

Share via