2026- சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே திமுகவின் இலக்கு- முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ,
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் இன்று நடைபெற்ற திமுக தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் மாநாட்டிற்கு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தாங்கினார். இம் மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ,வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே திமுகவின் இலக்கு எனவும் 2004, 2019 ,2024 தேர்தலில் விருதுநகரில் இருந்து தொடங்கப்பட்ட பிரச்சாரங்கள் மாபெரும் வெற்றியை தந்தது போலவே இந்த மாநாடும் வர இருக்கும் தேர்தலில் இதுவரை அடையாள வெற்றியை ஈட்டி தரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கல்வி நிதி ,மெட்ரோ நிதி, மதுரை எய்ம்ஸ் மற்றும் நீட் விளக்கு போன்ற கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஜீரோ தான் கொடுத்துள்ளது .எனவே ,தேர்தலில் நாமும் அவர்களுக்கு ஜீரோ தான் கொடுக்க வேண்டும் எனவும் மொழிப்பற்று மற்றும் கொள்கை பிடிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் பூத்து கமிட்டி பணிகளை வலுப்படுத்தி சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags :


















