காட்டுயானை குட்டி ஈன்று எடுக்கும்போது தாயும் குட்டியும் உயிரிழந்தது.

by Editor / 28-08-2022 08:33:55pm
காட்டுயானை குட்டி ஈன்று எடுக்கும்போது தாயும் குட்டியும் உயிரிழந்தது.


கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகதுக்கு உட்பட BBTC தாய்முடி MD அருகவே தேயிலை தோட்டத்திற்குள் காட்டுயானை தாயும் குட்டியும் இறந்துகிடந்தது. இது குறித்து தோட்டத்தொழிலார்கள் எஸ்டேட் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் நிர்வாகம் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். 
தகவல் அறிந்த வனத்துறையினர் மானாம்பள்ளி வனச்சரகர்   மணிகண்டன் அவர்கள் தலைமையில் வன கால்நடை மருத்துவர் திரு. விஜயராகவன் மற்றும் வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து இறந்த  யானை  சுமார் 38 வயது மற்றும் குட்டியையும் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வுக்காக குடல், இதயம், கல்லீரல் ஆகியவற்றை மீட்டு சென்னை ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆய்வறிக்கை வந்தபின்னர் இறந்தது குறைத்து முழு தகவல் அறிவிக்கப்படும் என்றனர். 

யானை கடந்த 25 ம் தேதி ரேஷன் கடையை உடைத்து அரிசி உட்கொண்டது. அன்று முதல் அந்த பகுதியில் உலாவந்துள்ளது. பின்னர்  தேயிலை தோட்டத்தில் மறைக்கபட்டு  காலாவதியான யூரியா மற்றும் தேயிலை செடிக்கு பயன்படுத்தும் சில மருந்துகள் கிடந்துள்ளது. ஆதலால் அந்த பகுதிமக்கள் கூறுகையில் யானை தேயிலை தோட்டத்தில் மறைக்கப்பட்டிருந்த காலாவதியான யூரியா மற்றும் சில காலாவதியான மருந்துகளை உட்கொண்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via