அண்ணாமலை வெல்வார்! விரலை வெட்டிக் கொண்ட பாஜக நிர்வாகி

கடலூரை சேர்ந்த ராமலிங்கம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். இவர் கோவையில் கடந்த 10 நாட்களாக தங்கி அண்ணாமலைக்காக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று முழக்கமிட்டவாறே தன் கைவிரலை துண்டித்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொண்டர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ராமலிங்கத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு துண்டிக்கப்பட்ட விரல் இணைக்கப்பட்டதோடு அவரின் உடல் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது,
Tags :