பட்டாகத்தியுடன் பயணித்தால் 10 ஆண்டு சிறை
சென்னையில் ஓடும் ரயிலில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லை மீறி செல்கிறது. மின்சார ரயிலில் தொங்கியபடி தனியார் கல்லூரி மாணவர்கள் நேற்று பயணம் செய்தனர். சென்னை - திருத்தணி மின்சார ரெயிலில் அட்டூழியம் செய்த மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார். ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 6 பேர் ஏற்கனவே ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இந்நிலையில், பட்டாகத்தியுடன் ரயிலில் பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தினால் இந்திய ரயில்வே சட்டப்பிரிவு 153ன் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
Tags :