இரண்டு பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து 15 குழந்தைகள் பலி
மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் புதன்கிழமை கோர விபத்து நடந்தது. மாணவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் உள்ள பிஸ்னுபூர்-கௌபம் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் சில மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் யாரிபோக்கில் உள்ள தம்பலானு மேல்நிலைப் பள்ளிக்குச் சொந்தமானது. பள்ளி ஆய்வு சுற்றுலா சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
Tags :











masala idly.jpg)







