காளிகாம்பாளை தரிசித்தால் பொன்னும் பொருளும் புகழும் கிடைக்கும்.

சென்னைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதனுள் ஆன்மீக தேடலுக்கான-இறை வழிபாட்டிற்குரியஸ்தலங்கள் பலஉள்ளன. அவற்றுள் சக்தி .. அம்பாள் வழிபாட்டிற்குரிய ஆலயங்களுள் சிறப்பிற்குரியது.காளிகாம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கும் கண்கண்ட தெய்வம் .அன்னை காளிகாம்பாள்கிழக்கே ஆர்பரித்தெழும் கடலையே தம் தீர்த்த குளமாகக்கொண்டவள்.வங்காள விரிகுடாவின் அலையோசையேமந்திர வேத ஒலிகளாக ஒலித்துக்கொண்டருக்கும்.மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி போர்மேற்கொண்டு வந்தவனை வெற்றி வாகைசூட வைத்தவள்.தன்னைவணங்கியவர் வாழ்வை வணங்க வைக்கும் வடிவழகி காளிகாம்பாள்.அமைதி சொரூபமாக-சாந்தம் தவழும்முகம் கொண்டு சிரிக்கும் காட்சி ..தேவலோகத்திற்குச்சென்று இறைவியை தரிசித்த உணர்வு உண்டாகும்.சென்னை பாரிமுனையில்-உயர்நீதி மன்றம் அருகே தம்பு தெருவில் அம்பாள் அருள் பாலிக்கும் ஆலயம் உள்ளது.
Tags :