ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 பேர் வேட்பு மனு தாக்கல்

by Editor / 19-09-2021 05:55:03pm
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 பேர் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 நாட்களில் 20 ஆயிரத்து 74 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது.

4-வது நாளான நேற்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரத்து 372 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 940 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 207 வேட்பு மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 13 வேட்பு மனுக்களும் என 6 ஆயிரத்து 532 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கல் தொடங்கிய 4 நாட்களிலும் சேர்த்து கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 ஆயிரத்து 420 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 ஆயிரத்து 243 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 385 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 வேட்புமனுக்களும் என 20 ஆயிரத்து 74 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

 

Tags :

Share via