நீட் ஆய்வுக்குழு செல்லும் -பாஜகவுக்கு மூக்கடைப்பு
தமிழ்நாடு அரசு, நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய அமைத்த ஆய்வுக் குழு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக அரசு, தங்கள் மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நீட் தேர்வு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது அரசு.
இதை எதிர்த்து பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிமன்றம், ‘நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல. பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே அரசு இந்த குழுவை அமைத்துள்ளது’ என்று கருத்து தெரிவித்து உள்ளது.
Tags :