தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு :அமைச்சர்கள் விளக்கம்

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறப்பது என்பது பற்றி முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகஷே் பொய்யாமொழி ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன் லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,
பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்து அதன் பின்னர் முதலமைச்சர் முடிவை தெரிவிப்பார் என்று கூறினார்.
இதனிடையே திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
புதுச்சேரியை போல் தமிழகத்திலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்படி பள்ளிகளை திறக்க முடிவு செய்வோம் என்றார்.
Tags :