ஓகா - மதுரை இடையே வாராந்திர ரயில் சேவை - முன்பதிவு தொடங்கியது.

by Editor / 01-07-2023 03:28:33pm
ஓகா - மதுரை இடையே வாராந்திர ரயில் சேவை - முன்பதிவு தொடங்கியது.  குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து மதுரைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க மேற்கு ரயில்வே  ஏற்பாடு செய்துள்ளது. திங்கட்கிழமைகளான (ஜூலை 10,17,24,31 ) ஆகிய தேதிகளில் ஓகாவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் ரயிலானது (வ.எண்.09520) துவாரகா,ராஜ்கோட், அகமதாபாத்,சூரத்,ரேனிகுண்டா, விழுப்புரம்,திருச்சி, திண்டுக்கல் வழியாக நான்காவது  நாள் (வியாழக்கிழமை) காலை 11.45 மணிக்கு மதுரை வந்தடையும். மறுமார்க்கம் வெள்ளிக்கிழமைகளான ( ஜூலை 14,21,28, ஆகஸ்ட் 4) ஆகிய தேதிகளில் மதுரையிலிருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு புறப்படும் ரயிலானது மூன்றாவது நாள் (ஞாயிற்றுக்கிழமை)காலை 10.20 மணிக்கு ஓகாவிற்கு சென்றடையும்.இந்த வாராந்திர சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியு
 

Tags :

Share via