பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பாராட்டு திருமாவளவனை

by Staff / 30-10-2022 12:55:15pm
 பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பாராட்டு திருமாவளவனை

விசிக தலைவர் திருமாவளவனை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், "திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ். பற்றி கடுமையான கருத்துக்களை முன் வைத்துள்ளார். சனாதனம் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அடிப்படையில் பார்த்தால் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே திருமாவளவன் பாடுபடுகிறார். இதற்கான முறைகளும், அர்த்தங்களும் வேண்டுமானால் மாறுபடலாம்.

ஆனால் அடிப்படையில் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஒரே சிந்தனையுடன் தான் பயணிக்கிறோம். பா.ஜனதாவில் கூட பட்டியல் இன தலைவர்களும், பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களும் வட இந்தியாவில் சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். எங்கள் பக்கம் வரக்கூடாது என்று நாங்கள் அவர்களை சொல்லவில்லை. திருமாவளவன் உள்ளிட்டவர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories