3 கார்கள் மோதிய  விபத்தில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம். 

by Editor / 25-05-2025 09:59:13pm
3 கார்கள் மோதிய  விபத்தில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சிவலார்குளம் விலக்கு 3  கார்கள் மோதிய விபத்தில் சாலை ஓரம் பைக்கில் சென்று கொண்டிருந்த ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை சுந்தர விநாயகர் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன்  கணபதி என்பவர் படுகாயம் அடைந்தார்.   சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் மூளை சாவு அடைந்தார்.  அதனையடுத்து அவர் உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது. ‌இ‌ன்று இரவு அறுவை சிகிச்சை மூலமாக உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது.நாளை காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்துவதாகவும்,அதனை தொடர்ந்து அவரது உடல் தென்காசி மாவட்டம் மாறாந்தையில் அடக்கம் செய்யப்படுகிறதாக தகவல். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் ஓட்டுனராக உள்ளார்.

 

Tags : 3 கார்கள் மோதிய  விபத்தில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம் 

Share via