கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது.

by Editor / 25-05-2025 04:30:50pm
கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது.

கேரளா, விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது.
சரக்கு கப்பலில் பணியில் இருந்த கப்பலில் பயணித்த 24 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக இன்று கடலில் மூழ்கியது.

சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது.
சரக்கு கப்பலில் இருக்கும் 640 கண்டெய்னரில், 13 கண்டெய்னரில் மிக ஆபத்தான பொருட்கள் உள்ளதால் காவல்துறை தீவிர கண்காணிப்பு.

சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது.

Share via