விளையாட்டு வினையாகி சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வேடிக்கைக்காக ஸ்டண்ட் செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்தார். பெட்ஷீட் விற்பனை செய்துவரும் ஒரு இளைஞர் கூட்டம் சாலை ஓரத்தில் பெட்ஷீட்களை போட்டு வைத்திருந்தனர். அதில் அந்த இளைஞர் Front Flip ஸ்டண்ட் செய்தார். முதல் முறை சரியாக செய்த அவர் இரண்டாவது முறை அதிக பெட்ஷீட்களை போட்டு அதில் ஸ்டண்ட் செய்தபோது நேராக தலையை தரையில் ஊன்றியதால் கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :