பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள். காவல்துறை தீவிர விசாரணை

தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈனா விளக்கு பகுதியில் இருந்து இலத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மது நாத பேரி குளத்தில் இன்று எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர் அதில் அந்த பெண்ணின் உடலில் முழு பாகம் எரிக்கப்பட்ட நிலையில் கை மட்டும் எரியாமல் இருந்துள்ளது மேலும் காலில் மெட்டி அணிந்துள்ளார் இன்று கண்டறியப்பட்டது இந்த தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் பெண்கள் யாரும் காணாமல் போய் இருக்கிறார்கள் என்பது குறித்தும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் தடய அறிவியல் துறையினர் அங்கு கடந்த தடயங்களை சேகரித்தனர்.மேலும் எரிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முழுமையாக கவர் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது மேலும் இந்த கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன கயிறுமூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அந்தப் பெண்ணின் உடலை எரித்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது ஒருவர் மட்டும் செய்த செயலாக இருக்காது என்று இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து செய்த செயலாக இருக்கலாம் என்றும் ஒன்று கணவன் மனைவி பிரச்சினையாக இருக்கலாம் இல்லையெனில் கள்ளக்காதல் பிரச்சினையாக இருக்கலாம் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பல்வேறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
Tags :