மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலின் காரணமாக 38 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து
உத்தரப்பிரதேச மாநில பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 12ஆம் தேதி தொடங்கியது. அடுத்த பிப்ரவரி மாதம் மாதம் 26 ஆம் தேதி வரை இந்த ஆன்மீக சங்கமம் 45 நாட்கள் வரை நடக்கிறது. மாவலி அமாவாசையான இன்று, அதிகாலையில் இருந்தே திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்கான ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலே பலர் காயமுற்றதோடு 38 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தம் சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜ்.மகா கும்பாமேளாவில் நடந்த விபத்து வருத்தம் அளிப்ப தாகவும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவு நடைபெறுகிறது.
இது நூத்தி நாற்பத்தி நாலு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரக்கூடிய நிகழ்வு என்றும்
மகா கும்பமேளாவில் இன்று மாவலி அமாவாசை தினத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 38 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின்றன
இந்த மகா கும்பமேளா திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தம் சமூக வலைதள பக்கத்தில்,
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல ர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்கிற செய்தி வருத்தம் அளிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பது ஆகவும் நிர்வாகம் சரியாக இயங்காததின் காரணமாக பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிர்வாகம் விஐபிகளை பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியதனால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர்களும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags :