ரூ. 20,000 கொடுத்து  மீனை ஏலத்தில் எடுத்த பெண்!

by Editor / 20-08-2021 04:13:32pm
 ரூ. 20,000 கொடுத்து  மீனை ஏலத்தில் எடுத்த பெண்!


 

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் கிடைக்கக் கூடிய `புலாசா' என்ற அறிய வகை மீன் அங்கு மிகவும் பிரபலம். கோதாவரி ஆற்றில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த மீனுக்கு அங்கு கிராக்கி அதிகம். 
 ஆந்திர மக்களின் உணவில் இந்த மீன் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆந்திர மக்கள் விரும்பி உண்ணும் இந்த மீன் எப்போதாவதுதான் மீனவர்களில் வலைகளில் சிக்கும். கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றுக்கு விலை நிர்ணயிக்கப்படும்.
வலைகளில் `புலாசா' மீன் சிக்கிவிட்டதென்று தெரிந்தால் அரசியல்வாதிகள் முதல் முன்னணி சினிமா நடிகர், நடிகைகள் என அனைவரும் அதனை ஏலத்தில் எடுக்க குவிந்துவிடுவார்கள். ஆந்திரா மாநிலத்தின் சந்தைகளில் மட்டுமே இந்த மீன் கிடைக்குமென்பதால் அம்மாநில மக்கள் மட்டுமல்ல கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் புலாசா மீனை வாங்க ஆந்திராவை நோக்கி படையெடுப்பார்கள்.
புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் பகுதி ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. நேற்று முன் தினம் ஏனாம் ஆற்றில் சிக்கிய ஒரு புலாசா மீன் ஏலத்தில் விடப்பட்டது. 2.5 கிலோ எடையுள்ள அந்த மீனை அதே பகுதியைச் சேர்ந்த பார்வதி என்ற மீனவப் பெண் 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்திருக்கிறார்.

 

Tags :

Share via