வயநாடு நிலச்சரிவு: ரூ.6 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்

வயநாடில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் தங்களது குடும்பங்களை இழந்து வாடி வருகின்றனர். இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000, 60% உடல் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ.75,000, முகாம்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags :