பட்டாசு ஆலை வெடி விபத்து - நிவாரணம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் கார்த்திகேயன், புள்ளகுட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tags :