மெக்கானிக்கை அடித்த புகார் எஸ்.ஐ. சஸ்பெண்ட்-ஐஜி பிரேம் ஆனந்த் சின்காஅதிரடி நடவடிக்கை.
மதுரை மாவட்டம் பாலமேடு காவல்துறை எஸ்.ஐ.,அண்ணாதுரை. வாடிப்பட்டியில் 'புல்லட்' மெக்கானிக் கடை வைத்துள்ள திண்டுக்கல் மட்டப்பாறை சீனிவாசன் 31, கடைக்கு ஜன.4ல் வந்த அண்ணாதுரை தனது புல்லட்டை 'ஓசி'யில் வேலைபார்த்த தர முடியாதா எனக்கேட்டு சீனிவாசன் கன்னத்தில் அறைந்து தாக்கி தரக்குறைவாக பேசி மிரட்டினார்.
இது கடை கண்காணிப்பு கேமராவில் பதிவானது. நேற்று எஸ்.பி., அர்விந்த் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் சீனிவாசன் அளித்த புகார் மனுவில்,
3 ஆண்டுகளுக்கு முன் வாடிப்பட்டியில் பணியில் இருந்த அண்ணாதுரை வேலை கூலி ரூ.8600 பாக்கி வைத்துள்ளார்.
தற்போது 5 மாதங்களுக்கு முன் மீண்டும் முன்பணம் ஏதும் தராமல் புல்லட்டை வேலை பார்க்க சொல்லி மிரட்டி வந்தார்.
காவலர் முரளி என்பவர் வந்து கடைக்கு வந்து ஓசியில் வேலை பார்க்காவிட்டால் கஞ்சா வழக்கு என்கவுன்டர் என மிரட்டி கடை ஊழியரை தாக்கினார் என தெரிவித்துள்ளார். இதற்கு இடையே சீனிவாசனை அண்ணாதுரை அடிக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை நேற்று இரவு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்
Tags : ஐஜி பிரேம் ஆனந்த் சின்காஅதிரடி நடவடிக்கை.