உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் காலமானார்!

by Editor / 26-04-2023 06:45:37am
உடல்நலக்குறைவால் முன்னாள் முதல்வர் காலமானார்!

 பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலிதளத்தின் (ST) தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95) நேற்று காலமானார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சற்றுமுன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்துள்ளார். மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இன்று அவரது உடல் நல்அடக்கம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via