சித்திரை திருவிழா மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை.

by Editor / 26-04-2023 07:03:10am
 சித்திரை திருவிழா மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை.

உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களும் மீனாட்சி அம்மன் வாகனத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், கள்ளழகர் மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மே 5ம் தேதியை உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, மே மாதம் 5ம் தேதி விடப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூன் 10ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories