வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மூன்று மணியோடு நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மூன்று மணியோடு நிறைவடைந்தது. வேட்பு மனுக்கள் திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்ததை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது .சுயேட்சை வேட்பாளர்களுக்கு காலியாக உள்ள தேர்தல் சின்னங்கள் இறுதிப்பட்டியல் வெளியிட்ட பிறகு ஒதுக்கப்படும். 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது .தேர்தலில் பதிவான வாக்குகள் மே- 4 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் .
கடந்த சில நாட்களுக்கு முன் சுமார் 7,600 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பரிசீலனைக்கு பிறகு சுமார் 4000 மனுக்கள் ஏற்கப்பட்டன. தற்பொழுது வாபஸ் காலம் முடிந்து உள்ளதால் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
Tags :



















