இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இலங்கை கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் 32 வயதான திசாரா பெரேரா. இவர், 2009ஆம் ஆண்டு தனது தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட தொடங்கினார்.
2006 மற்றும் 2008 யு19 உலகக்கோப்பை, நான்கு டி20 உலகக்கோப்பை (2010, 2012, 2014, 2016), மூன்று உலககக் கோப்பை (2011, 2015, 2019), இரண்டு சாம்பியன்ஸ் டிராபி (2013, 2017) ஆகிய ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்காக பல வெற்றிகளை குவித்து கொடுத்த திசாரா பெரேரா, கேப்டனாக இலங்கை அணியை சிறப்பாகவும் வழிநடத்தினார். உள்நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திசாரா பெரேரா அறிவித்துள்ளார்.
இவரின் அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மட்டுமல்லாமல், அந்த அணியின் முன்னாள், இன்னாள் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு குறித்து திசாரா பெரேரா கூறுகையில், இளம் வீரர்களுக்கு வழிவிடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவும் ஓய்வு முடிவை அறிவித்துள்ளேன் என்று கூறினார். மேலும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் திசாரா பெரேரா கூறினார்.
Tags :