வீடியோ கான்பரன்சில் கூடும் ஜி20 உச்சிமாநாடு : கனடா, ரஷ்யா அதிபர்கள் பங்கேற்பு
புதுடெல்லியில் கடந்த செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றது. இதில், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நிலை குறித்து மீண்டும் ஆய்வு செய்ய காணொளி காட்சி வாயிலாக ஜி20 உச்சி மாநாடு நடத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, காணொளி காட்சி உச்சிமாநாடு இன்று நடைபெறுகிறது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பங்கேற்காத ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். இதேபோல், கடந்த ஜி20 உச்சிமாநாட்டிற்குப் பிறகு இந்தியா - கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடியும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் சந்திக்கும் முதல் மாநாடாக இந்த மாநாடு விளங்க உள்ளது.
Tags :