மீண்டும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு பிரான்ஸ்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறாா்கள்.

by Admin / 26-04-2023 09:39:30am
மீண்டும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு  பிரான்ஸ்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறாா்கள்.

 ஜனவரி 2023 ஜனாதிபதி இம்மானுவேல்  தனது அரசாங்கத்தின் மூலமாக ஓய்வு பெறுபவர்களின் வயதை 62 இல் இருந்து 64 ஆக உயர்த்துவதற்கான திட்டத்தை அறிவித்தனர். இது பிரான்ஸ் முழுவதிலும் அரசியல் ஆவேசத்தையும் பெரும்பான்மையான மக்களினுடைய கோபத்தையும் எதிர்நோக்கி இருந்தது .பிரெஞ்சு மக்கள் இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை தொடர்ச்சியான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பின் மூலமாக தங்கள் மறுப்பு குரலை கேட்கும் படியாக செய்து வருகின்றனர். பிரான்சில் ஓய்வூதிய முறையானது முதன்மையாக பணம் செலுத்தும் கட்டமைப்பை நம்பி உள்ளதாகவும் அங்கு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஓய்வூதியங்களுக்கு அளிக்கப்படும் நிதியானது கட்டாய ஊதிய வரிகளாக மதிப்பிடப்படுகின்றனர் என்றும்  ஓய்வு பெறுகிறவர் அரசனது ஓய்வூதியத்தை உத்தரவாதமாக அளிக்கும் என்கிற நிலையில் சொல்லப்பட்டாலும் இந்த போராட்டங்கள் ஓய்வூதியத்திற்கு அப்பாற்பட்டவையாக போராட்டக்காரர்கள் நினைக்கிறார்கள். மக்ரோனி அவரது அரசாங்கமும் உயர்ந்து வரக்கூடிய ஆயுள் காலம் இந்த அமைப்பை ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றுள்ளதாகவும் கருதுகின்றனர். அரசாங்க ஓய்வூதியத்திற்கு நிதியளிக்க அதிக வயதானவர்கள் மற்றும் ஒப்பீட்டு அளவில் குறைவான தொழிலாளர்கள் இருப்பதாக அரசு தரப்பு சொல்லப்படுகிறது அதிக வரி செலுத்துவோரின் வரிப்பணத்தை முறையாக செலுத்தாமல் இந்த அமைப்பை நிதி ரீதியாக லாப நோக்கோடு வைத்திருக்க 2030ல் 64 வயதை அடையும் வரை ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்குள் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான சட்டபூர்வமான வயதை படிப்படியாக உயர்த்துவதற்கு மக்ரோன் அரசு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். பிரெஞ்சு குடிமக்களில் சிலர் அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்படுவதாகவும் இது நாளும் முழுவதும் உள்ள நகரங்களில் அழிவை உருவாக்குவதற்கான ஆர்ப்பாட்டங்களை வன்முறைகளை தூண்டி விடுவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர். நாட்டில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இந்த குழப்பம் பிரான்சில் ஜனநாயகத்தில் பிளவை உருவாக்கி உள்ளதாகவும் ஓய்வூதிய மறுப்பு முதுமை பற்றி மட்டும்தானா என்கிற கேள்வியும் உடன் எழுகிறதாகவும் பல பிரெஞ்சு குடிமக்கள் ஓய்வூதிய சீர்த்திருதிற்காக மட்டும் வேலை நிறுத்தம் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் பொதுவாக மக்ரோன் அவரது அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து தங்களுடைய அதிருப்திகளை வெளியிட்டு வருகின்றனர்.. நேற்று முதல் மீண்டும் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via