இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.

by Admin / 25-09-2025 09:19:15am
 இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.

 இந்தியா முழுவதும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி. செப்டம்பர் மாதம் இருபத்திஇரண்டாம் தேதி தொடங்கி அக்டோபர் 2 வரை நடக்கும் ஆன்மீக திருவிழா. இது ஒவ்வொரு வீடுகளிலும் கொழு வைத்து நவ தேவிகளை வழிபடும் பண்டிகையாகும்.. வட இந்தியாவில் துர்க்கை அம்மனை வழிபட்டு கொண்டாடுவது போல் தென்னிந்தியாவில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ,விஜய தசமி என கொண்டாடப்படும் விழா. புராணக் கதைகளின் படி அசுர ராஜன் மகிஷாசுரனை தேவர்களை காக்கும் பொருட்டு ஒன்பது சக்திகள் ஒன்பது இரவுகளின் பொழுது துர்கா தேவியாக சக்தி வடிவெடுத்து மகிஷாசுரனை அளித்ததை குறிக்கும் நாள் நவராத்திரி.. பத்தாவது நாள் விஜயதசமி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளாக அது பார்க்கப்படு கின்றது.

 இறைவன் இச்சா சக்தியாக- ஞான சக்தியாக -கிரியா சக்தியாக உலகை படைத்தான்- அதன் வெளிப்பாடே நவராத்திரி என்று சொல்லப்படுகின்றது.. ஒன்பது நாளில் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியின் வெளிப்பாடாக துர்க்கையின் ஆட்சிக்காலமும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியின் ஆட்சி காலமாக ஞான சக்தியும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியின் ஆட்சி காலமாகும் இதைக் குறிப்பதே சிவராத்திரி என்கிற கருத்தும் உள்ளது.. புரட்டாசி மாதத்தில் பிரதமை காலத்தில் ஆரம்பித்து நவமியில் முடியக்கூடிய  வளர்பிறையில் ஒன்பது நாட்களும் இறைவனை சக்தியை வழிபடுவதற்குரியதாக அமைந்துள்ளது. .துர்கா தேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் மகிஷாசுரனை வதம் செய்து அளித்தால் என்றும் அந்த நாள் நவமி மறுநாள் தசமியில் தேவர்கள் இந்த வெற்றியை ஆயுத பூஜையுடன் கொண்டாடியதாகவும் சொல்லப்படுகின்றது..

நவராத்திரி விரதம் என்பது முதல் மூன்று நாள்கள் சக்தியை வழிபட்டு வீரத்தை பெறுவதாகவும் அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி இடமிருந்துசெல்வத்தை பெறுவதாகவும் இறுதி மூன்று நாட்களில் கல்வியை கலைமகளிடமிருந்து பெறுவதாகவும் சொல்லப்படுகின்றது..

 

Tags :

Share via