சமூக வலைத்தளங்களில் முதலிடம் பிடித்த விஜய்.

by Staff / 25-09-2025 08:34:17am
சமூக வலைத்தளங்களில் முதலிடம் பிடித்த விஜய்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் ஆகிய சமூக வலைத்தளங்களில் சராசரியாக 93 லட்சம் பின்தொடர்பவர்களுடன் அரசியல்வாதிகல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், சீமான் போன்றோரின் பின்தொடர்பவர்களையும் விட அதிகம். இருப்பினும், சினிமா பிரபலமாக இருப்பதால் விஜய்க்கு அதிக பின்தொடர்பவர்கள் இருப்பது இயல்பு என்றும், இதை வாக்கு எண்ணிக்கையாகக் கருதக்கூடாது என்றும் வலைத்தள வாசிகள்கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
 

 

Tags : சமூக வலைத்தளங்களில் முதலிடம் பிடித்த விஜய்.

Share via