தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வானிலை ஆய்வு மையம்.

by Editor / 09-07-2022 09:03:38am
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வானிலை ஆய்வு மையம்.

இன்று முதல் வரும் ஜூலை 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால் தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : 3 days of moderate rain in Tamil Nadu Meteorological Centre.

Share via