ரயிலுக்கு தீ வைப்பு மூன்று பேர் உயிரிழப்பு
கேரளாவின் கண்ணூர்-ஆலப்புழா எக்சிகியூட்டிவ் ரயிலுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட நிலையில், மற்ற பெட்டிகள் உடனே கழட்டிவிடப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயை முதலில் கண்ட ரயில்வே ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அதே ரயிலுக்கு இலத்தூரில் மர்ம நபர் தீ வைத்திருந்தார். இதில் மூன்று பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















