அ.ராசாவின் மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்ற முதல்வர்!

by Editor / 28-05-2021 07:32:31am
அ.ராசாவின் மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்ற முதல்வர்!

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி மார்பக புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக உடல்நிலை பற்றி ரேலா மருத்துவமனை முதல்வர் முகமத் ரேலாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிலையில் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்றுமருத்துவர்களிடம் ஆ.ராசா மனைவியின் உடல் நலம்குறித்து கேட்டறிந்தார். ஆ.ராசாவின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.அவருடன் அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏக்கள் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின்,பல்லாவரம் இ. கருணாநிதி மற்றும் சபரீசன் ஆகியோர் உடன் சென்றனர்.

அ.ராசாவின் மனைவியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்ற முதல்வர்!
 

Tags :

Share via