புதுவையை போல் தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறையா
குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புதுவை அரசு சமீபத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திலும் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்பதும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் புதுவையை போல் தமிழகத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம், "தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நோயின் தன்மையை ஆராய்ந்து அதன் பின் தான் ஒரு முடிவு எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
Tags :