தீண்டாமையை போலவே மத வெறுப்பும் மோசமானது டிடிவி தினகரன்

by Staff / 18-09-2022 03:16:46pm
தீண்டாமையை போலவே மத வெறுப்பும் மோசமானது  டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசியில் மட்டுமல்ல,எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo