மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் உமாசக்தியிடமிருந்து 28 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல்
கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தியிடமிருந்து 28 லட்சத்து 35 ஆயிரம் பறிமுதல்.போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி ஓய்வுபெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் உதவியுடன் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமிருந்து மாமூல் வசூலித்தது தெரியவந்துள்ளது.
Tags : 28 lakh 35 thousand confiscated from Zonal Joint Transport Commissioner Umasakthi