புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

by Staff / 26-05-2023 02:54:36pm
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் திறக்க தடையில்லை - உச்சநீதிமன்றம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். நாடாளுமன்ற நிகழ்வை தொடங்கிவைப்பதையும், கட்டடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னதாக, நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என கூறி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories