அதிர்ச்சி: கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து! கூட்டத்தில் கொரோனா நோயாளிகளும் கலந்தனர்

by Editor / 22-05-2021 08:10:22am
 அதிர்ச்சி: கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து!  கூட்டத்தில் கொரோனா நோயாளிகளும் கலந்தனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் எனக்கூறி அனந்தய்யா என்பவர் விற்றதை அடுத்து அதனை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

கிருஷ்ணப்பட்டினம் பகுதியில் அனந்தய்யா என்பவர் மூன்று வகையான மருந்துகளை விற்பனை செய்தார். அதை சாப்பிட்டால் கொரோனா வராமல் தடுக்க முடியும், கொரோனா இருப்பவர்களுக்கு குணமாகும், மூச்சு விட முடியாமல் அவதிப்படும் நோயாளிகள் குணம் பெறுவார்கள் என்று கூறினார். இதை கேள்விப்பட்ட மக்கள் ஏராளமானோர் ஒரே இடத்தில் குவிந்தனர். ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் கிருஷ்ணப் பட்டினம் பகுதிக்கு வந்தனர்.

நேற்று அங்கு சுமார் 50 ஆயிரம் பேர் மருந்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இது கொடுமை என்னவென்றால் மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் மருந்து வாங்க குவிந்தனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அந்த கிராமத்தை நோக்கி வர ஆரம்பித்துவிட்டன. கூட்டம் அதிகம் சேர்ந்ததால் அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ்களும், மற்ற வாகனங் களும் ஊருக்குள் வராமல் இருக்க ஆங்காங்கே முள் செடிகளை வெட்டி சாலையில் போட்டனர். இதனால், நோயாளிகளின் உறவினர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்த ஆயுர்வேத மருந்து குறித்து தொற்றை குணப்படுத்துகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு ஐசிஎம்ஆர் குழுவினருக்குஉத்தரவிட்டார்.

 

Tags :

Share via