தென்காசி அருகே மர்ம நபரால்  பூ வியாபாரி வெட்டிக்கொலை.

by Staff / 16-06-2025 10:18:39am
தென்காசி அருகே மர்ம நபரால்  பூ வியாபாரி வெட்டிக்கொலை.

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில்  இன்று அதிகாலையில் பவுண்டு தெருவை சேர்ந்த   காளிமுத்து மகன் சுடர் வடிவேலு (57) என்பவர் மர்ம நபரால்  வெட்டி கொலை செய்யப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இவர் ஊத்துமலை பஸ் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார் .சம்பவ இடத்தில் ஊத்துமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.  இது சம்பந்தமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

 

Tags : தென்காசி அருகே மர்ம நபரால்  பூ வியாபாரி வெட்டிக்கொலை.

Share via