உசிலம்பட்டி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டடிரைவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.

மதுரை: உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் சின்னச்சாமி (38). இவரது மனைவி ரூபாவதி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நண்பர்கள், உறவினர்களிடம் பல லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத அளவு நெருக்கடி ஏற்பட்டதால் மன உளைச்சலில் சின்னச்சாமி, பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : Driver involved in online gambling in Usilampatti commits suicide by jumping in front of train.