பொதிகை,சிலம்பு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் நாளைமுதல் இயக்கம்
பொதிகை மற்றும் சிலம்பு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அக்டோபர் 1 நாளை முதல், விருதுநகர்,தென்காசி வழித்தடத்தில் டீசல் என்ஜினுக்கு பதில் மின்சார என்ஜின் மூலமாக பயணத்தை தொடங்க போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
விருதுநகர் - தென்காசி, திருநெல்வேலி - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையிலான அகல ரயில் பாதை மின்மயமாக்கப்படும் என 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதில் திருநெல்வேலி - தென்காசி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து மின்சார ரயிகளின் இயக்கம் இன்னும் தொடங்கப்பாடவில்லை.டீசல் எஞ்சின் ரயில்கள் இயங்குகின்றன.விருதுநகர் - தென்காசி, தென்காசி - செங்கோட்டை இடையே கடந்த ஓராண்டாக நடந்த மின்மயமாக்கல்அனைத்து பணிகளும் முடிந்தும் விட்டநிலையில் மின்பாதையில் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு எப்போது ரயில் இயக்கம் நரைபெறும் என பயணிகள் தொடர்ந்து காத்திருந்த நிலையில் செங்கோட்டை-தென்காசி-விருதுநகர் வழித்தடத்தில் அக்டோபர் 1 ஆம் தேதியான நாளை முதல் பொதிகை ரயில் wdm-7.என்ற அதிவேக மின்சார என்ஜின் பொருத்தப்பட்டும், சிலம்பு எக்ஸ்பிரஸ் wdm-4 அதிவேக மின்சார என்ஜின் பொருத்தபட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags : பொதிகை,சிலம்பு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் நாளைமுதல் இயக்கம்