அக்டோபர் 1 முதல் திருநெல்வேலி ரயில் நிலைய கால அட்டவணை மாற்றம்

by Editor / 01-10-2023 12:02:17am
அக்டோபர் 1 முதல் திருநெல்வேலி ரயில் நிலைய கால அட்டவணை மாற்றம்

வருடம் தோறும் அக்டோபர் 1 முதல் புதிய ரயில் கால அட்டவணை அமுலுக்கு வருவது வழக்கம். அதன்படி திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சில ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 05.40 மணிக்கு பதிலாக அதிகாலை 05.35 மணிக்கு 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (17235) திருநெல்வேலியில் இருந்து காலை 06.05 மணிக்கு பதிலாக காலை 05.55 மணிக்கு 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். சென்னை - கொல்லம் அனந்தபுரி
எக்ஸ்பிரஸ் (20685) திருநெல்வேலியில் இருந்து காலை 06.50 மணிக்கு பதிலாக காலை 06.30 மணிக்கு 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339) திருநெல்வேலியில் இருந்து காலை  08.25 மணிக்கு பதிலாக காலை 08.20 மணிக்கு 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (12689) திருநெல்வேலியில் இருந்து காலை 09.13 மணிக்கு பதிலாக காலை 08.40 மணிக்கு 33 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா
எக்ஸ்பிரஸ் (20691) திருநெல்வேலியில் இருந்து காலை 11.30 மணிக்கு பதிலாக காலை 11.20 மணிக்கு 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி
எக்ஸ்பிரஸ் (22627) திருநெல்வேலியில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதிலாக மதியம் 12.20 மணிக்கு 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16322) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.25 மணிக்கு பதிலாக மாலை 06.05 மணிக்கு 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636) திருநெல்வேலியில் இருந்து இரவு 08.05 மணிக்கு பதிலாக இரவு 08.00 மணிக்கு 5 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். திருநெல்வேலி - திருச்செந்தூர் சிறப்பு ரயில் எக்ஸ்பிரஸ் (06675) திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு பதிலாக காலை 10.10 மணிக்கு 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.


 

 

Tags : அக்டோபர் 1 முதல் திருநெல்வேலி ரயில் நிலைய கால அட்டவணை மாற்றம்

Share via