மனைவியின் கண்முன் கணவர் கொடூர கொலை

by Staff / 01-11-2022 04:15:04pm
மனைவியின் கண்முன் கணவர் கொடூர கொலை

ஆந்திரா, சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தாமு என்ற தொழிலாளிக்கும், அனுராதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தாமு மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று திரும்பிகோண்டிருந்த நிலையில், திர்லப்பள்ளி கொத்தகுண்டம் வழியாக வந்தபோது அடையாளம் தெரியாத 3 நபர்கள் திடீரென சாலையில் தோன்றி தாமுவை வழிமறித்தனர்.

பின் கத்தியை காட்டி மிரட்டி தாமு அணிந்திருந்த நகைகளை தரும்படி மிரட்டினர். ஆனால் தாமு தரமறுத்து சத்தம் போட்ட நிலையில், அந்த கும்பல் மிளகாய் பொடியை எடுத்து இருவர் மீதும் தூவி தாக்குதல் நடத்தினர். பின் இருவரையும் சாலையில் தள்ளி தாமுவின் கழுத்தில் இருந்த நகைகளை பறிக்க முயற்சி செய்தனர். அதை தாமு தடுப்பதற்கு போராடிய நிலையில், அவரை அதே இடத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொடூர தாக்குதலால் படுகாயம் அடைந்த தாமு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த கும்பல் பின் மனைவியையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. அனுரதா படுகாயத்துடன் உதவி வேண்டி கூச்சலிட்டார். பின் அந்த இடத்தில் கூடிய பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த புங்கனூர் போலீசார் தாமுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.திருமாணமான 6 மாதத்திலேயே தன் கணவர் கண்முன்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனைவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo