சிறுமிக்கு செருப்பை மாட்டி விடும் ராகுலின் புகைப்படம் வைரல்.

by Editor / 18-09-2022 01:06:53pm
சிறுமிக்கு செருப்பை மாட்டி விடும் ராகுலின் புகைப்படம் வைரல்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை பயணத்தின் 11-வது நாளான இன்று (18-09-2022) காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின்  தொகுதியான கேரளா மாநிலம் ஆழப்புழா மாவட்டத்தில் கரிபாடு அரசு வட்ட தலைமை மருத்துவமனை அருகில் இருந்து தனது நடைபயணத்தை ராகுல் காந்தி அவர்கள் தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் தனது நடைபயணத்தை ஒட்டி சாலையோரத்தில் திரண்டு நிற்கும் மக்களை அவர் சந்தித்து வருகிறார்.அவருடன் நடைபயணத்தில் பங்கேற்ற ஒருவர் தனது 3வயது மகளையும் அழைத்துக்கொண்டு சென்றார்.அந்த குழந்தையின் ஒரு கரத்தை தந்தையும்,மற்றொரு கரத்தை ராகுல்காந்தியும் பிடித்துக்கொண்டு நடந்து சென்ற நிலையில் சிறுமியின் செருப்பு கழண்டதால் உடனடியாக ராகுல் காந்தி குனிந்து சிறுமியின் செருப்பை மாட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சிறுமிக்கு செருப்பை மாட்டி விடும் ராகுலின் புகைப்படம் வைரல்.
 

Tags :

Share via